March 25, 2012

கோல்டன் பீச் தோசை







ஈஞ்சம்பாக்கம் தங்கக்கடற்கரை இதுதான் சென்னையின் முதல் தீம் பார்க் என்று நினைக்கிறேன்.தங்ககடற்கரைஎன்றதும் சிரிக்காது நிற்கும் சிலை மனிதர் தவிர நீநீநீநீநீ..ள தோசைதான் ஞாபகத்திற்கு வரும்.

சென்ற வாரம் அங்கு சென்று இருந்த பொழுது சிலை மனிதரைக்காணவில்லை.ரெஸ்ட் எடுக்கப்போய் இருப்பாரோ?அல்லது அன்று அவருக்கு விடுமுறையோ தெரியவில்லை.

எத்தனையோ முறை அங்கு சென்று இருந்தாலும் ஒரு முறை கூட நீள தோசை சாப்பிட்டதில்லை.

இந்த முறை வலைப்பூவில் எழுத வேண்டும் என்பதற்காக கேண்டீன் பக்கம் சென்றோம்.8 அடி தோசை 1000 ரூபாய்.3 அடி தோசை 200 ரூபாய் என்று போர்டில் எழுதப்பட்டு இருந்தது.

எட்டு அடி தோசை சாப்பிட ஆள் இல்லாததால் மூன்றடி தோசைக்கு ஆர்டர் செய்தோம்.களை கட்டி இருந்த கேண்டீனில் எட்டடி தோசை தென்பட்டால் கேமராவில் கிளிக் செய்யலாம் என்று சுற்று முற்றும் பார்த்தால் ஏமாற்றம்தான்.

ஆர்டர் செய்த அரைமணிநேரத்திற்கு பிறகு தோசை கிடைத்தது.தோசையைப்பார்த்ததுமே சாப்பிடும் ஆசை போய் விட்டது.ஒரு பக்கம் முறுகலாக இன்னொரு பக்கம் வெந்தும் வேகாததுமான ஒரு நீள தோசை அலுமினிய டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து சுருட்டப்பட்டு இருந்தது.

தோசையில் முறுகலான பகுதியையும்,வெண்மையான பகுதியையும் பார்த்ததும் பிளேக் அண்ட் வைட் தோசை என்று உடனடியாக செல்லப்பெயர் சூட்டி விட்டனர்.

கூடவே ஆறிப்போன சாம்பார்,ஐஸ் போன்று ஜில்லிட்டிருந்த உருளைக்கிழங்கு மசால்,புளித்துப்போன தேங்காய் சட்னி...

எதுவும் சாப்பிடாமல் அலுமினிய டிரேயில் இருந்த தோசையை கொத்து பரோட்டாவாக்கி அதகளப்படுத்தி விட்டு எழுந்தது தான் மிச்சம்.

”நல்ல வேளை ஆட்கள் அதிகம் இருந்து எட்டடி தோசை ஆர்டர் பண்ணாமல் தப்பித்தோம்” பெருமூச்சு விட்ட படி நடையைக்கட்டினோம்.





March 20, 2012

சிட்டுக்குருவி




சிட்டுக்குருவி (Sparrow)என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்.யாரையும் துன்புறுத்தாத அதன் அமைதியான சுபாவம்,அதன் சுறு சுறுப்பு,உற்சாகத்துள்ளல்,படு ஜாக்கிரதையான உருட்டும் விழிப்பார்வை,அதன் குட்டியான உருவம்,கீச்சு கீச்சு என்று கத்தும் மெல்லிய சப்தம் ,பெண்குருவியின் மென்மையான உருவம் ,ஆண்குருவியின் கம்பீர உருவம்,பட்டுப்போன்ற மென்மையான உடலைமைப்பு,கையில் பிடித்து தடவினால் குட்டியூண்டு தலையை ஆட்டி சிலிர்த்துகொள்ளும் பாங்கு மொத்ததில் அப்பாவியான தோற்றம் சந்தோஷத்திற்கு அடையாளமாக கருதப்படும் சிட்டுக்குருவியின் தன்மை எது என்னை அதன் பால் ஈர்த்தது என்று கணிக்க இயலவில்லை.

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.தமிழ்நாட்டில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள்,கிணற்றான்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டு காலமாகும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும்.கூடுகட்டத்தெரியாத, மனிதர்களின் செயல் பாட்டை நம்பி வாழும் அப்பாவிப்பறவையினம் என்றால் மிகை ஆகாது.

1.சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

2.சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா

3.சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு

4.சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது

5.ஏ குருவி சிட்டுக்குருவி ஒஞ் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு

6.சிட்டுக்குருவி வெக்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத் தருது

7.சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி

8.சிட்டு சிட்டுக் குருவிக்கு கூடு எதுக்கு அது


இப்படிப்பல பாடல்களை கொண்டு சினிமா உலகம் சிட்டுகுருவியின் அரும் பெருமைகளை பதிவு செய்துள்ளது.சிறுக சிறுக சேமிப்பதனைக்கூட சிட்டுக்குருவி சேர்த்தார்ப்போல் என்றே சிட்டுக்குருவியை முன்னிலைப்படுத்தி உவமானம் கூறுவார்கள்

இந்த சிட்டான குருவியைப்பற்றி தமிழ் இலக்கியமும் பல இடங்களில் பதிவு செய்துள்ளது வரலாறு கூறும் உண்மை.


விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு

முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.

மகாகவி பாரதியாரும் சிட்டுக்குருவி பற்றி மேற்கண்டவாறு பாடி புளங்காகிதப்பட்டுள்ளார்.

இளம் ஜோடிகளை இளம் சிட்டுகள் என்றும்,இளமை பிராயத்தில் சுறு சுறுப்பாக வளைய வரும் யுவன் யுவதிகளையும் சிட்டுகள் என்றும்,வேகமாக ஓடியவனை சிட்டென பறந்து விட்டான் என்றும் படைப்பாளிகள் கட்டியம் கூறுகின்றனர்.

மைனா (maina - Acridotheres tristis) )வல்லூறு(Shaheen Falcon),ஆந்தை(hawk) பொன்னி (indian pitta )போன்று அழிந்து வரும் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகிப்போனதுதான் கவலை தரும் உண்மை.

சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ,சோடியம் விளக்குகளால் அழிகின்றன.வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது.இதனால் குருவிகளுக்கு உணவுப்பற்றாகுறை ஏற்பட்டுவிட்டது.செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன,பறந்து கொண்டிருக்கும் பொழுதே கதிர்வீச்சின் நச்சுத்தன்மையால் செத்து மடிகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.

அந்தக்காலத்தில் வீட்டிற்கு வெளியே உரல் வைத்து நெல் குத்தி அரிசி எடுப்பார்கள்.முறம் வைத்து தானியங்களை புடைப்பார்கள்.ஆனால் இப்பொழுது அது அரிதாகி விட்டது.

சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி அக்காலத்தில் இருந்தது போக இப்பொழுது கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

பொட்டலம் கட்டி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அண்ணாச்சிகளை காணாமல் போகப்போக இந்த அப்பாவி உயிரினமோ உலகை விட்டே காணாமல் போய்க்கொண்டுள்ளது.

நாள்தோறும் தமது வாழ்வுக்காக அந்த சின்னஞ்சிட்டுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அழிந்துகொண்டிருக்கும் பறவை இனமாக சிட்டுக்குருவிகளை காக்க 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் திங்கள் 20 ஆம் நாளை உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூறப்படுகிறது.


யாருக்கும் தீங்கிழைக்காத அந்த சின்னஞ்சிறு உயிரினம் வளரும் தலை முறைகளுக்கு அறியபடாமல் போய் விடக்கூடிய ஆபத்தை தவிர்ப்போம்!தவறினால் இனி வரும் காலங்களில் சிட்டுக்குருவிகள் தினத்தை மட்டிலுமே கொண்டாடுவோமே தவிர சிட்டுக்களை கண்ணால் காண இயலாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் வந்துவிடும்.

சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன என்ற விபரங்களை சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட இயற்கை ஆர்வலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நம்மால் முடிந்தவரை திரட்டப்படும் தகவல்கள் ஆர்வலர் சங்கத்துக்கு தெரியப்படுத்தலாம்.

சிட்டுக்குருவிகள் நின்று கொண்டிருக்கும் காட்சிகள்,அவை தானியங்களை உண்ணும் காட்சிகள்,கூடுகளில் குடித்தனம் நடத்தும் காட்சிகள் போன்ற சிட்டுக்குருவிகள் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படம் உங்களிடம் இருந்தால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.

சிறந்த புகைப்படங்களுக்கும் தகவல்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.

மின்னஞ்சல் முகவரி : MNSsparrow@yahoo.in

அப்பாவிக்குருவிகளை அரவணைப்போம்!
அதன் வாழ்வாதரத்தை உயிர்பிப்போம்!
அழிந்து வரும் இனத்தைக்காப்போம்!
இயற்கை ஆர்வலர்களுக்கு கைகொடுப்போம்!!

March 13, 2012

தக்‌ஷின் சித்ரா - 2

தக்ஷின் சித்ராவில் பழங்கால வித விதமான

இல்லங்களைப்பார்த்தோம்.இப்பொழுது அந்த இல்லங்களுக்குள்

நுழைந்து

அங்கிருக்கும் பொருட்களைப்பார்ப்போமா.?


ஐயராத்து மாமியும் அவரது பொண்ணும் தாயகட்டம் விளையாடுகின்றார்கள்.

பழங்காலத்து தூணுக்கு பின்னால் பானை முறம்,கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளும் பனைஓலையிலான பட்டை(வாளிக்கு முன்னர் உபயோகத்தில் இருந்தது.)தண்ணீர் சேகரித்து வைக்கும் குடுவை,ஓலையிலான பெட்டிகள் இத்யாதி..


மியூஸிக் உபகரணங்கள்
அந்தக்காலத்தில் மச்சி வீட்டிற்கு(மாடி)செல்லும் மரத்தில் ஆன ஏணி.


ஐயராத்து அம்பிக்கு சிரத்தையாக சொல்லிக்கொடுக்கும் குரு.பணிவாய் கற்றுக்கொள்ளும் சிஷ்யன்
தேக்கு மரத்தில் ஆன் பெட்டகம்.
பழங்கால அலமாரி
விலையுயர்ந்த பொருட்கள் வைத்துக்கொள்ளும் குட்டியூண்டு அலமாரி.
துளசிமாடத்திற்கு கீழே கோலம் போடும் மடிசார்மாமி.
பித்தளை செம்பினால் ஆன பாத்திரங்கள்.
கலை உணர்வு மிக்க கைவினைப்பொருட்கள்.
விஷேஷங்களுக்கு மூன்று கல் அடுப்பில் வைத்து விறகு எரித்து சமைக்கும் பித்தளை அண்டா.
குழந்தைகளை தூங்கவைக்க வித வித மரதொட்டில்கள் துணித்தூளி.
பனை ஓலையினால் முடையப்பட்ட வித விதமான ஓலை உபகரணங்கள்.



குயவர் வீட்டில் குவிந்து கிடக்கும் மினியேச்சர் பாத்திரங்கள்.

நெசவாளர் வீட்டில் கைராட்டிணம்.
முற்றத்தில் துளசி மாடம்.மினு மினுக்கும் உச்சி வெயில் ஜொலி ஜொலிக்க.
தறியில் நெசவாளர் பட்டு நெய்கின்றார்.பத்தாயிரம் விலை மதிப்பிலான பட்டை நெய்ய ஆறு நாட்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டுமாம்.ஏழை நெசவாளிகளின் தொழில் நசிந்து வருவது வேதனைக்குறிய விஷயம்.

நெசவாளர் வீட்டுக்குள்ளேயே ஒற்றை மாட்டு பொட்டு வண்டி.


நெசவாளரும் அவரது சகதர்மினியும்.பின்னனியில் பாருங்கள்.மரத்திலான ஸ்டாண்டில் குடைக்கம்பு (வாக்கிங் ஸ்டிக்),டர்பன்.குடை,துணிவேலைபாட்டினால் ஆன பெரிய விசிறி.
கேரளா வீட்டு ஹால்.
கேரளா ஸ்டைல் மரத்தில் ஆன குள்ளப் படிக்கட்டு.
ஊறுகாய் ஜாடிகள்
சமையலுக்கு பயன் படும் வாசனைப்பொருட்கள்.



March 11, 2012

வலைச்சரம் ஏழாம் நாள்






வலைச்சரம் ஏழாம் நாள்



கதம்பச்சரம்

March 10, 2012

வலைச்சரம் ஆறாம் நாள்





வலைச்சரம் ஆறாம் நாள்


கவிச்சரம்

March 9, 2012

வலைச்சரம் ஐந்தாம் நாள்






வலைச்சரம் ஐந்தாம் நாள்





March 8, 2012

வலைச்சரம் நான்காம் நாள்.



வலைச்சரம் நாண்காம் நாள்


March 7, 2012

வலைச்சரம் மூன்றாம் நாள்



வலைச்சரத்தில் மூன்றாம்நாள்



March 6, 2012

வலைச்சரம் இரண்டாம் நாள்





வலைச்சரத்தில் இரண்டாம் நாள்.


March 5, 2012

வலைச்சரம் முதல் நாள்



வலைச்சரத்தில் முதல் நாள்

March 3, 2012

காரைக்குடி ரெஸ்டாரெண்ட்

சென்னையில் பல இடங்களில் காரைக்குடி ரெஸ்டாரெண்ட் கிளைகள் ஆரம்பித்து அசல் செட்டிநாட்டு உணவுவகைளை,செட்டிநாட்டு பின்னணியுடன் சுவையாக வழங்குகின்றார்கள்.

நான் சென்றது போரூர் உணவகம்.உணவகத்தினுள் நுழைந்தாலே செட்டிநாட்டு வீட்டுனுள் நுழைத்த பிரம்மையை ஏற்படுத்தும்.மேலிருந்து தொங்கும் பழங்கால பாணி விளக்குகள்,சுவரில் அலங்கரித்துப்பட்டு இருக்கும் வண்ண ஓவியங்கள்,கலைப்பொருட்கள்,பறிமாறும் பாத்திரங்கள்,டம்ளருக்கு பதில் எவர்சில்வர் சொம்பு என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

அருமையான வெஜிடேரியன் தாலி ,நான்வெஜிடேரியன் தாலி கிடைக்கின்றது.நான் வெஜ் தாலி என்றால் மீன் குழம்பிலும்,கறிக்குழம்பிலும் பீஸைத்தேடிக்கொண்டிருக்க கூடாது.வெறுமனே குழம்பு மட்டிலும்தான். மீன் , கறி பீஸ் வேண்டுமென்றால் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும்.

தாலி மீல்ஸ் வெறுமனே 90 ரூபாய்தான் என்றாலும் ஒரு சைட் டிஷ் விலை அதை விட அதிகமாக உள்ளது.

தாலியில் சூடான பச்சரிசி சாதத்துடன்,சாம்பார்,ரசம்,பொரியல்,வற்றல் குழம்பு,பருப்பு சேர்த்த கூட்டு,காய்கறி கூட்டு.கெட்டித்தயிர்,ஸ்வீட்,மீன் குழம்பு ,கறிக்குழம்பு என்று அன் லிமிடெட் ஆக பரிமாறுகின்றனர்.

அப்பளப்பிரியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அப்பளங்களை விளாசித்தள்ளலாம்.வற்றல் குழம்பு திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடத்தூண்டும் அருமையான சுவை.
தந்தூரி சிக்கன் பல ரெஸ்டாரெண்டுகளில் வெந்தும் வேகாததுமாக பறிமாறுவார்கள்.இங்கு நன்றாக வேகவிடப்பட்ட தந்தூரி சிக்கன் சுவையான பச்சை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தொக்கு போல் இருக்கும் செட்டிநாட்டு நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி காராசாரத்துடன் சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும்.
மொறு மொறுப்பான நெத்திலி வறுவலில் கருவேப்பிலையை பொரித்து போட்டு கார்னிஷ் பண்ணி இருப்பார்கள்.பொரித்த கருவேப்பிலையுடன் நெத்திலி பிரையை சாப்பிட்டால் யம்மிதான்.

சைட் டிஸ்கள் சற்று காஸ்ட்லியாக இருந்தாலும் சுவைக்காக செலவு செய்யலாம்.

ஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்.வழக்கம் போல் நானே பீடா செய்து ரெண்டு ரவுண்டு சாப்பிட்டு விடுவேன்.இந்த முறை பீடா சாப்பிடுவது மிஸ்ஸிங்.காரணம் தட்டு நிறைய தாம்பூலம் இருந்தாலும் புத்தாண்டு resolution பீடா ,பாக்கு பக்கமே போகக்கூடாது என்பதால் தாம்பூலதாம்பாளம் என்னை வா வா என்று அழைத்தும் வலுகட்டயமாக திரும்பிப்பார்க்காமல் வந்து விட்டேனாக்கும்:(